படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 5
1. துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை!
இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!
அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.
சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!
சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
2. முத்தமும் சத்தமும்!
ஒரு பாகிஸ்தானி, ஒரு சர்தாஜி, ஒரு அழகான இளம்பெண் ஆகிய மூவரும் ரயிலில் ஒரு முறை பயணம் செய்தனர். ரயில் ஒரு குகையினூடே பயணித்துக் கொண்டிருந்த இருட்டு வேளையில், முத்தமிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கன்னத்தில் அறை விழும் சத்தமும் கேட்டது!!!
ரயில் குகையிலிருந்து வெளிவந்து ரயில் பெட்டியில் வெளிச்சம் பரவியபோது, பயணிகள் அனைவரும் பாகிஸ்தானியின் கன்னம் சிவந்து வீங்கியிருப்பதை பார்த்தனர். பாகிஸ்தானி குழப்பத்துடன், "அந்த திருட்டு சர்தாஜி அந்த அழகிய பெண்ணை முத்தமிட முயன்று, அவள் தவறுதலாக என்னை அறைந்து விட்டாள்" என நினைத்துக் கொண்டான். அந்த பெண்ணோ, "அந்த பாகிஸ்தானி நான் என நினைத்துக் கொண்டு சர்தார்ஜியை முத்தமிட்டதால் அறைபட்டிருப்பான்!" என்று எண்ணினாள்!
நம் அன்புக்குரிய புத்திசாலி(!) சர்தார்ஜி, "இந்த ரயில் மீண்டும் ஒரு குகைக்குள் நுழைந்தால், அந்த இருட்டில், நானே, முத்தமிடுவது போல் இன்னொரு சப்தத்தை உண்டாக்கி, அந்த பாகிஸ்தானி முட்டாளை மறுபடியும் செவிட்டுல் அறைய வாய்ப்பு கிடைக்குமே!!!" என்று நினைத்துக் கொண்டார் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
NO GODDDDDDDDD!!!!!!!!!!!!!!
ஒவ்வொரு நாட்டவனும் தனது எதிரிகளை எப்படி கேவலப்படுத்தவேண்டுமோ அப்படி செய்து சுயதிருப்தி அடைகிறார்கள். அவ்வாறான மனநிலை தவிர்க்கப்படவேண்டும் என்பது புலனாகும். ஆனால் என்ன செய்வது?
நீங்கள் குறிப்பிட்ட ரயில் பம்பல் இலங்கையிலும் தமிழ் சிங்கள முரண்பாடுகளுக்கு தீனிபோட பயன்படுவதுண்டு.
இதுவும் அப்படியான ஒன்று.
ஒவ்வொரு நாட்டவருடைய மூளை விலையும் 5000 டொலர்களுக்கு குறைவாகதான் விற்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் ***** நாட்டு மூளைமட்டும் விலை அதிகமாக இருந்ததாம். அதனால் ஆச்சரியப்பட்ட ஒருவர் ஏனென விசாரித்தாராம். அதற்கு அவர்கள் சொன்ன பதில். "அவை New ones.ஒரு தடவையும் அவர்கள் மூளையை பயன்படுத்தமாட்டார்கள் அதனால் அவை எப்போதும் புதிதாக இருக்கும். அதனால்தான் அந்தவிலை "
Post a Comment